FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது பதிவுச் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் 323, 324, 326, 506(பகுதி 1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் தங்களை ஆடைகள் இல்லாமல் நிற்க வைத்து ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மற்றும் சக காவலர்கள் கொடுமையாக தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக தங்களது பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சுபாஷ் தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு தாங்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காவல்துறையினர், வழக்கறிஞர்களுடன் பாபநாசம் கொண்டு செல்லப்பட்டதாகவும்