அமைச்சர் நடத்திய யாகம் - பசு மிரண்டதால் பரபரப்பு!

தமிழகத்தில் கடும் தண்ணீர் பிரச்சை நிலவி வருகிறது. இதை அ.தி.மு.க அரசு தடுக்க தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்கள் செய்து வருகிறது. இதனையடுத்து மழை பெய்வது குறைந்ததால்தான் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாகச் சில அ.தி.மு.க அமைச்சர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மழை வேண்டி யாக நடத்தப்படும் என அ.தி.மு.க தலைமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இன்று அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் யாகம் நடத்தினர்.கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதற்காக பசு மாடு, யானை, குதிரை முதலியவற்றை அழைத்து வந்திருந்தனர். இவை அனைத்துக்கும் பட்டாடை உடுத்தப்பட்டிருந்தது. துரைக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் யாகத்தில் உட்கார்ந்திருந்தனர். ஆதிகும்பேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்களும் செய்யப்பட்டது. பின்னர், துரைக்கண்ணு முன்னிலையில் மேள தாளங்கள் முழங்க பசுவுக்கு கோ பூஜை செய்தனர். பசுவை சுற்றி அ.தி.மு.க தொண்டர்கள் நின்றுகொண்டு இருந்தனர். அப்போது பசு மிரண்டு ஓடியது. அங்கு நின்றவர்கள் பசுவை பிடிக்க முயன்றனர் ஆனால், கூட்டத்துக்கும் ஆக்ரோஷத்துடன் ஓடியது அப்போது தொண்டர் ஒருவரையும் முட்டியது. பின்னர், ஒரு வழியாகப் பசுவை பிடித்து கட்டினர். இதனால் துரைக்கண்ணு உள்ளிட்டவர்கள் கொஞ்சம் அப்செட் ஆகினர். இதைத் தொடர்ந்து மற்ற பூஜைகளை விரைவாக முடித்துக்கொண்டு துரைக்கண்ணு கிளம்பினார். இதனால் கோயில் வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்