அமைச்சர்களின் அலுவலக செலவு குறித்து விசாரிக்க புலனாய்வு குழு

கவர்னர் கிரண்பேடியின் அதிரடி உத்தரவால் பரபரப்பு புதுச்சேரி, ஜூன். 25 புதுவையில் முதலமைச்சர் நாரா யணசாமி தலைமையில் காங் கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. . முதலமைச்சர் நாராயண் சாமி, சபாநாயகர், அமைச்சர் களுக்கு சட்டமன்றத்தில் அலு வலகங்கள் இயங்கி வருகிறது. சட்டமன்ற அலுவலகங்களில் விருந்தினர்களை உபசரிப்பது, நினைவுப்பரிசு வழங்குவது, சந்திக்க வரும் மக்களுக்கு தேநீர், சிற்றுண்டி, மதிய உணவு வழங்குவது, எழுது பொருட்கள் ஆகியவற்றுக்கான செலவினங்களை சட்ட சபை செயலகம் வழங்குகிறது. இருப்பினும் அமைச்சர்கள் தங்கள் அவசர தேவைக் காகவோ, கூடுதல் தேவைக் கவர்னர் கிரண்பேடியின் காகவோ தங்கள் துறை சார்ந்த பொதுத்துறை, வாரியம், கழ கங்களில் இருந்து அலுவ லகங்களுக்கு பொருட்கள் பெறுவர். வருவாய்த்துறை வாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் துறை யின் கீழ் பிப்டிக் நிறுவனமும் உள்ளது. அமைச்சர் ஷாஜ கான் தனது அமைச்சரவை அலுவலக தேவைக்காக பிப்டிக் மூலம் வலைதள வசதி, எழுது பொருள், இருக்கை வசதி, மின் அடுப்பு, ஏணி, வாக்வம் கிளீனர் ஆகியவற்றை ரூ.3 லட்சத்து 16 ஆயிரத்திற்கு பெற்றுள்ளார். ச மூ க ந ல த் து ைற அமைச்சர் கந்தசாமி பாட்கோ மூலம் தேநீர், சிற்றுண்டி செல் வுக்காக 4 மாதத்திற்கு ரூ.15 ஆயிரத்து 980 பெற்றுள்ளார். இ து ெத ா ட ர் ப ா க ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலை வர் ரகுபதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உரிமை சட்டத்தின் கீழ் தகவலை பெற்று வெளியிட்டி ருந்தார். அமைச்சரவை அலு வலகங்களுக்கு சட்டசபை செயலகம் செலவு செய்யும் நிலையில் பொதுத்துறை நிறு வனங்களிடம் இருந்து செல வினங்களை பெறக்கூடாது என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. இதை பார்த்த கவர்னர் கிரண் பேடி விதியை மீறி பொதுத் துறை நிறுவனங்களின் நிதியை எடுத்து அமைச் சரவை அலுவலகங்கள் செலவு செய்ததை புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என் உத்தர விட்டுள்ளார். இதையடுத்து தலைமை செயலாளர் தலைமையிலான புலனாய்வு குழு இது தொடர் பாக விசாரணை நடத்தவுள் ளது. ஏற்கனவே முதலமைச்சர் நாராயணசாமி தலைமை யிலான அமைச்சரவைக்கும்கவர்னர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் கவர்னர் கிரண்பேடி அமைச்சர்களிடம்நேரடியாக மோதியிருப்பது புதுவையில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்