தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் சந்திப்பு
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (27.06.2019) வியாழக்கிழமை இரவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி., தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., தமிழ்மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., நாடாளுமன்ற மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ்கனி எம்.பி., ஆகியோர் நேரில் சந்தித்து நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சிறப்பான வெற்றி பெற்றமைக்காக வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். தேசிய அளவில் மதச்சார்பற்ற அணி வலுப்பெறுவதற்கு தாங்கள் முன்னின்று தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினர். தமிழகத்தில் “தி.மு.க. - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி பேரறிஞர் அண்ணா , கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலத்தில் மலர்ந்து, முத்தமிழறிஞர் பாக்டர் கலைஞர் காலத்தில் தொடர்ந்து, திராவிட இயக்கத்தின் நான்காவது தலைமுறையாகிய தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறோம்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதற்கு மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பின்போது தி.மு.க. பொருளாளர் துணமுருகன் எம்.எல்.ஏ., உடனிருந்தனர்.