கிரண்பேடியின் சர்ச்சை கருத்தை கண்டித்து மக்களவையில் தி.மு.க., காங்கிரஸ் அமளி
புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியின் சர்ச்சைக்குரிய மக்களவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர். சென்னையில் ஏற் பட்டுள்ள வறட்சிக்கு தமிழக அரசும், மக்களின் சுயநலமே காரணம் என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கருத்து பதிவிட்டிருந்தார். இது கடும் சர்ச் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக போராட் டங்களும் நடைபெற்றன. இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதி ரொலித்தது. மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து, கிரண்பேடியின் கருத்து பற்றி எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால், ஒத்திவைப்பு தீர்மானத்திற்குசபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை. இதனால் அதிருப்திஅடைந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவை யில் முழக்கங்கள் எழுப்பினர்.இதனால் அவையில் சிறிதுநேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சிறப்பு தீர்மானம் இல்லாமல் இதுபற்றிவிவாதிக்க முடியாது என்றார்.