சிலை கடத்தலில் தொடர்பு? அமைச்சர்கள் அலறல்

வேலுார், 'சிலை கடத்தலில் எங்களுக்கு தொடர்பு இல்லை' என அமைச்சர்கள் ராமச்சந்திரன், சீனிவாசன் ஆகியோர் கூறினர்.வேலுார் மாவட்டம் ஆம்பூரில் நேற்று மாலை இருவரும் அளித்த பேட்டி:சிலை கடத்தல் பிரச்னையில் அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் சீனிவாசனுக்கு தொடர்பு இருப்பதாக தனியார் 'டிவி' உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.இது பொய்யான குற்றச்சாட்டு. சிலை கடத்தலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டும் என்றே தவறான நோக்கத்தில் இத்தகவலை பரப்புகின்றனர். சிலை கடத்தலில் எங்களுக்கு தொடர்பு இல்லை. பொன். மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில் எங்கள் பெயர்களை தவறாக சித்தரிக்கின்றனர்.அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எங்கள் மீது திட்டமிட்டு பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இதனால் எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்