தகவல் அறியும் உரிமை (திருத்தம்) மசோதா, 2019 ஆபத்து என்ன? சட்டத் திருத்தம் ஏன்?
இந்திய வன சேவை அதிகாரியான திரு. சதுர்வேதி, ஜூன் 1, 2014 வரை வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்புப் பணத்தின் அளவு குறித்த தகவல்களைத் கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகளை அனுப்பினார். கடந்த 2018-இல் பிரதமர் அலுவலகம் சார்பாக அளிக்கப்பட்ட ஆரம்ப பதிலில், இந்தக் கேள்வியானது, பிரிவு 2 (f) இன் கீழான கேள்வி இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இதை ஆட்சேபித்து தகவலை வரையறுக்கும் சட்டத்தின் விவரமறிய வேண்டி சதுர்வேதி பின்னர் மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். ஆயினும், பிரதம மந்திரி அலுவலகம் (பி.எம்.ஓ) வெளிநாட்டிலிருந்து திரும்பக் கொண்டுவரும் கறுப்புப் பணத்தின் அளவை வெளியிட மறுத்துவிட்டது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஒரு விதிமுறையை மேற்கோளிட்டு, விசாரணையை தடைசெய்யக்கூடிய மற்றும் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர் முகாந்திரமிருக்கிறது என்ற அச்சம் காரணமாக தகவலை தர மறுத்துவிட்டது.ஆயினும், கடந்த 2018 அக்டோபர் 16 ம் தேதி மத்திய தகவல் ஆணையம் (CIC) சதுர்வேதிக்கு 15 நாட்களுக்குள் விவரங்களை வழங்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கு (PMO)க்கு பிறப்பித்தது. இவ்வேளையில் தகவல் அறியும் உரிமை (திருத்தம்) சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா விரைவில் மாநிலங்களவைக்கும் அனுப்பப்பட உள்ளது. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த சட்ட திருத்தத்தின்படி தலைமை தகவல் ஆணையர் மற்றும் காரிகளின் பதவி காலங்களை மத்திய அரசு தனது இஷ்டப்படி மாற்றிக்கொள்ள முடியும் தற்போது உள்ள சட்டத்தின்படி தலைமை தகவல் ஆணையரின் பதவி காலம் 5 ஆண்டுகள். ஆனால் தற்போது இந்த சட்ட திருத்தத்தின்படி, ஒரு ஆணையரை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் போல பதவி நீட்டிப்பு செய்யலாம். அதுமட்டுமல்லாமல் ஆணையரை நேரடியாக மத்திய அரசு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கும் நிலையும் ஏற்படதற்போது உள்ள நடைமுறைப்படி ஒரு மத்திய மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை உடைய கட்சியின் தலைவர் என மூன்று நபர்களின் ஆலோசனையின் பேரில் ஆணையர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் இந்த திருத்தத்தின்படி இனி மத்திய அரசே தன்னிச்சையாக ஆணையரை தேர்வு செய்யும் நிலை ஏற்படும். மேலும் தகவல் ஆணையர் உட்பட அதிகாரிகளின் சம்பளமும் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தையும் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன