போலி விசாவில் 36 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய போலி போலீஸ் ஏட்டுவை, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்

சிவகங்கை: . அனுமதியின்றி ரஷ்யாவில் தங்கியிருந்ததாக கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 36 பேர் இந்திய தூதரகம் மூலம் சமீபத்தில் மீட்கப்பட்டனர். இவர்களை சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த முத்துக்குமார் (28), ரஷ்யாவிற்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே வடவாத்தி கிராமத்தை சேர்ந்த பிரபு (20), சிவகங்கை மாவட்ட எஸ்பி ரோகித்நாதனிடம் புகார் செய்தார். புகாரில், தன்னிடம் ஆவுடையார்கோவிலை சேர்ந்த ராமச்சந்திரன், சிவகங்கையில் போலீசாக பணிபுரிவதாக கூறி முத்துக்குமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் முத்துகுமாரிடம் ரஷ்யா நாட்டிற்கு வேலைக்கு செல்ல ரூ.1.40 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்று கொண்ட முத்துக்குமார், போலி விசாவில் ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்ததால் அங்கு போலீசில் சிக்கி தவித்ததாக தெரிவித்திருந்தார். இதுகுறித்த எஸ்பி உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லிராணி கொண்ட தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சிங்கம்புணரியில் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணிபுரிந்த முத்துக்குமார், போலீஸ் ஏட்டு என்று போலி அடையாள அட்டை தயாரித்து வைத்துக்கொண்டு ரஷ்யாவுக்கு வேலைக்கு அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். ரஷ்யா போன்று வேறு நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி மோசடி செய்துள்ளாரா என முத்துக்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்