சிறுபான்மையினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை

கழகத்திற்கு விசுவாசமாக உழைக்கும் ஒரு உண்மைத்தொண்டர். 65 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் பெற்றவர். இதுவரை MP, MLA மட்டுமல்லாமல் நகர்மன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை கூட சுவைக்காதவர். மாண்புமிகு அம்மா அவர்களால் தமிழக வக்ஃப் வாரிய தலைவராக அறிவிக்கப்பட்டு 4 ஆண்டு காலம் திறம்பட செயல்பட்டவர். சிறந்த பேச்சாற்றல் இவரிடம் உண்டு. இன்றைக்கும் சாதாரண தொண்டன் வணக்கம் சொன்னால் கையை பிடித்துக்கொண்டு நலம் விசாரிக்கும் சகோதரத்துவம் படைத்தவர்... மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்த நாளில் தலைமைக்கழக பேச்சாளர்களை சென்னைக்கு வரவழைத்து பரிசு வழங்கி செலவுக்கு பணம் கொடுத்தனுப்பும் நல்ல மனம் படைத்த பண்பாளர். தமிழக மக்கள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட போது தன் சொந்த நிதியிலிருந்து மக்களுக்கு பல உதவிகளை வழங்கியவர்... இத்தகைய சிறப்புகளை தாங்கிய தமிழ்மகன் உசேன் அவர்களை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்வதே கழக தொண்டர்களின் விருப்பம்... நிறைவேறுமா..? நாடாளுமன்ற மக்களைவை தேர்தலில் சிறுபான்மையினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற அதிருப்தியை சரிசெய்ய கழக தலைமை பரிசீலனை செய்யவேண்டும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்