ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி... இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது...!
ஏ.டி.எம் கட்டணம், குறைந்தபட்ச கணக்குத்தொகை அபராதம் என்று சமீப காலமாக எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் சிக்கலை சந்தித்த நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு இனிப்பானதாக அமைந்துள்ளது. எஸ்.பி.ஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாக உள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் IMPS, NEFT மற்றும் RTGS சேவைகளுக்கான கட்டணங்களை வங்கிகள் குறைக்க வேண்டும் என்று சென்ற மாதம் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், ஏற்கனவே மேற்கண்ட சேவைகளுக்கான கட்டணங்களை குறைத்து அறிவித்த எஸ்.பி.ஐ , வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இணையதள வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, யோனோ செயலி சேவை மூலமாகப் பணம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கட்டண விலக்கு அளித்துள்ளது. ஏ.டி.எம் கட்டணம், குறைந்தபட்ச கணக்குத்தொகை அபராதம் என்று சமீப காலமாக எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் சிக்கலை சந்தித்த நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு இனிப்பானதாக அமைந்துள்ளது. விரைவில் மற்ற பொதுத்துறை வங்கிகளும் இதேபோன்ற கட்டண விலக்கு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன,