தந்தையின் நண்பர் மகளிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வலைவிரித்த தொழிலதிபர் மகன் கைது

சென்னையில் தந்தையின் நண்பர் மகளிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வலைவிரித்த தொழிலதிபர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை அடுத்த பெரம்பூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சாமுவேல். வாரம் தோறும் தேவாலயத்திற்கு செல்லும்போது வின்சென்ட் என்ற தொழில் அதிபர் உடன் பழக்கம் ஏற்பட்டது. சாமுவேலுக்கு 35 வயதில் ஜோஸ் என்ற மகனும், வின்சென்ட்டுக்கு 20 வயதில் பல் மருத்துவம் படித்து வரும் மகளும் உள்ளனர். ஜோசுக்கு திருமணம் ஆகி விட்டது.இந்நிலையில் பெற்றோர் இருவரும் நண்பர்களாக உள்ள நிலையில், நாமும் நண்பர்களாக இருப்போம் என வின்சென்ட் மகளிடம் கூறியுள்ளார் ஜோஸ். ஆனால் அவர் பிடிகொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், தாம் ஏற்றுமதி தொழில் செய்து வருவதாகவும், அதை கற்றுத்தருவதாக கூறியும் வீட்டிற்கு அந்த மாணவியை அழைத்துள்ளார்.நீண்ட நாட்களாக தவிர்த்து வந்த இளம்பெண், கடந்த வாரம் ஜோஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிதுநேரம் சாதரணமாக பேசிய ஜோஸ், ஒரு கட்டத்தில் தனது ஆசைக்கு இணங்குமாறு மாணவியை வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அவரை திட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.பின்னர் இது குறித்து தனது தந்தை வின்சென்ட்டிடம் மாணவி தெரிவித்துள்ளார். உடனடியாக வின்சென்ட் மாதவரம் காவல்நிலையத்தில் மகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், ஜோஸை கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில், ஜோசுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பல கல்லூரி மாணவிகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது ஆசைக்கு இணங்க வைத்தது தெரியவந்தது. இதை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்