போலி பாஸ்போர்ட் தயார் செய்த கும்பல் கைது..!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் போலி பாஸ்போர்ட் தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாலக்கொல்லு பகுதியை சேர்ந்த ராம்பாபு என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு குவைத் சென்றபோது, போதைப்பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டான். இந்நிலையில், குவைத்தில் ஏற்கனவே பழக்கமான இலங்கையை சேர்ந்த ஜாகிர் உசேன், முகமது பாஷ்ஷா, காதர் பாஷா ஆகியோருடன் இணைந்து ராம்பாபு போலி பாஸ்போர்ட் தயார் செய்துள்ளார். இதற்கு நெல்லூரை சேர்ந்த ஆன்லைன் பாஸ்போர்ட் சர்வீஸ் செய்து வந்த ராஜசேகர ரெட்டி, கடப்பாவை சேர்ந்த ஷேக் முகமது ஆகியோர் உதவி புரிந்துள்ளனர். இந்த போலி பாஸ்போர்ட் மூலம் அடிக்கடி ராம்பாபு குவைத் சென்று வந்துள்ளான். ராஜசேகர ரெட்டி மூலமாக தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளான். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் ராம்பாபு உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பியவர்கள் தீவிரவாதிகளா அல்லது போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நவ்தீப் சிங் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்