இன்று தியாகத்திருநாளாம் மொகரம் பண்டிகை

உலகம் முழுவதும் இன்று தியாகத்திருநாளாம் மொகரத்தை பின்பற்றி இஸ்லாமிய மக்கள் வழிபாடுகளை செய்து வருகின்றனர். ஈத் என்றால் கொண்டாட்டம். ஆனால் மொகரம் இஸ்லாமியர்களுக்கு துன்பத்தை அனுசரிக்கும் பண்டிகையாக இருக்கிறது. தங்கள் உடல்களில் சாட்டையால் அடித்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊர்வலமாக சென்று தியாகத்தை போற்றுகின்றனர். தற்போதைய ஈராக் நாட்டின் கர்பாலா எனுமிடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் ஹூசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் இஸ்லாமியத்தை பாதுகாக்கும் பொருட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த நாளாக இது கருதப்படுகிறது. சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இதனை முஸ்லீம்கள் முக்கிய திருநாளாக அனுசரிக்கின்றனர். கத்தியால் உடலைக் கீறுவது, வாள் சுழற்சி சாட்டையால் விளாசுதல் போன்ற காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கின்றன. மனித நேயத்தைப் போற்றும் மகத்தான நாளாகவும் மொகரம் பண்டிகை சிறப்பு பெற்றுள்ளது. ஏழைகளுக்கு அன்னதானம், பொருள்தானம் போன்றவற்றையும் இஸ்லாமியர்கள் மேற்கொண்டு எல்லாம் வல்ல இறைவனை தொழுகை செய்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்