கமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பரபரப்பு புகார்

தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை நடிகர் கமல்ஹாசன் திரும்பித் தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மீது பிரபல சினிமா தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா கொடுத்திருக்கும் இந்த புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்