கிரிக்கெட் சங்க தலைவர் ஆகிறார் ரூபா குருநாத்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் ஒருமனதாக தேர்வாகிறார். மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். லோதா கமிட்டி பரிந்துரையின்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திலும், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்திலும் பல சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியில் இருக்கக்கூடாது. ஒருவர் தொடர்ந்து 2 முறை பதவி வகித்தால் அடுத்து ஒரு இடைவெளி விட்டு தான் பதவிக்கு வர முடியும். கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு பதவி வகிக்கக்கூடாது ஆகியவை லோதா கமிட்டி சிபாரிசுகளில் முக்கியமானதாகும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்