பள்ளி மாணவர்களிடையே பிளாஸ்டிக் தவிர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில், பிரதமர் மோடியின் பிளாஸ்டிக் எதிர்ப்பு வேண்டுகோளுக்கு இணங்க, அனைத்து பள்ளிகளுக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு பற்றிய அறிவுரை வழங்கும்படி தெரிவித்துள்ளார். அந்தவகையில், புதன்கிழமை ((நாளை)) முதல் அக்டோபர் 1ம் தேதி வரை மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும், குறிப்பாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது, பயன்பாட்டில் இருந்து நீக்குவது மற்றும் மறுசுழற்சிக்கு உட்படுத்துவது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அதன்பின் காந்தி ஜெயந்தி அன்று மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை பள்ளி மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து சேகரிக்க அறிவுறுத்தியுள்ளார். இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அக்டோபர் 3ம் தேதி முதல் அக்டோபர் 27ம் தேதி வரை மறுசுழற்சிக்கு உட்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது இந்த நிகழ்வுகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து அனுப்பவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்