போலி கால் சென்ட்டர் நடத்தி மக்களின் வங்கி விவரங்களைப் பெற்று பணத்தை சுருட்டிய கும்பல் கைது

டெல்லியில் போலி கால் சென்ட்டர் நடத்தி மக்களின் வங்கி விவரங்களைப் பெற்று பணத்தை சுருட்டிய கும்பலை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 6 நகரங்களில் 14 வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களும் 220 பேரை ஏமாற்றி சுருட்டிய 13 கோடி ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வங்கி மேனஜர் பேசுகிறேன்...உங்கள் கணக்கில் உள்ள பணத்தை சரிபார்க்க வேண்டும்....உங்கள் ஏடிஎம் எண்ணை தெரிவியுங்கள் என்று யாராவது தொலைபேசியில் அழைத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி எந்த வங்கி மேனஜரும் வாடிக்கையாளரை அழைப்பதில்லை. இத்தகைய போலியான நபர்கள் போலியான பெயர்களில் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துவிடுகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்