2020 பிப்., மாதத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு, ஆளுங்கட்சி தரப்பில் ஆலோசனை.....?

சென்னை : தனியார் நிறுவனம் நடத்திய, 'சர்வே' முடிவில், அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், மேயர் பதவிகளை கைப்பற்றுவதில், சம பலத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளதால், 2020 பிப்., மாதத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு, ஆளுங்கட்சி தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், நவம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என, கட்சிகள் எதிர்பார்க்கின்றன. அதற்கு ஆயத்தமாகும் வகையில், வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. 'வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் நடவடிக்கையில், கட்சி நிர்வாகிகள், உடனடியாக ஈடுபட வேண்டும். 'இதுதொடர்பாக, அறிவாலயத்திற்கு கடிதம் வாயிலாக, தகவல் தெரிவிக்க வேண்டும்' என, சமீபத்தில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், வாக்காளர்கள் சரிபார்க்கும் பணியை, தி.மு.க.,வினர் துவக்கி உள்ளனர். இந்நிலையில், நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தினால், அ.தி.மு.க., வெற்றி எப்படி இருக்கும். எந்தெந்த மாநகராட்சிகளில், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது குறித்து, ஆளுங்கட்சி ஏற்பாட்டில், தனியார் நிறுவனம் சார்பில், 'சர்வே' எடுக்கப்பட்டுள்ளது. அந்த சர்வே அடிப்படையில், அ.தி.மு.க., - தி.மு.க., சமபலத்தில் உள்ள தகவல் ெவளியாகி உள்ளது. இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: புதிதாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும், ஏற்கனவே உள்ள மாநகராட்சிகளில் எடுக்கப்பட்ட, சர்வே அறிக்கையில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை ஆகிய, ஐந்து மாநகராட்சிகள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளன. துாத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், ஆவடி, ஓசூர் ஆகிய மாநகராட்சிகள், தி.மு.க.,வுக்கு சாதகமாக அமைந்துள்ளன. வேலுார் மாநகராட்சியில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கடும் போட்டி உள்ளது. திருச்சி, தஞ்சாவூரில், தி.மு.க., - அ.தி.மு.க., - அ.ம.மு.க., ஆகிய கட்சிகளிடையே, மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. நாகர்கோவிலில், பா.ஜ., - காங்கிரஸ் இடையே, இரு முனைப் போட்டியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில், 80 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என, ஆளுங்கட்சி வியூகம் அமைத்து உள்ளது. ஆனால், அ.தி.மு.க., - தி.மு.க., சரிபாதியாக, தேர்தலில் வெற்றி பெறும் என, சர்வே அறிக்கை தெரிவிக்கிறது. எனவே, மக்களை கவரும் வகையில், நலத் திட்டங்களை செயல்படுத்த, ஆளுங்கட்சி முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு பிப்., மாதத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்தினால், அ.தி.மு.க., வுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என, அந்த சர்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், நவம்பர் மாதத்தில், உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்பது, கேள்விக்குறியாக எழுந்துள்ளது. இவ்வாறு, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறின.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்