நவீன வசதியுடன் கேமரா உட்பட ஓடும் மெமு ரயிலில் குழாய் திருட்டு: முதல் நாளிலேயே கைவரிசை

திருவனந்தபுரம் கோட்டத்தில் கண்காணிப்பு கேமரா உட்பட அதிநவீன வசதிகளுடன் இயக்கப்பட்ட மெமு ரயிலில், முதல்நாள் ஓட்டத்திலேயே ஸ்டீல் குழாய் திருடப்பட்டது. கேரளாவில், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் திருவனந்தபுரம்-எர்ணாகுளம் இடையே 2 நாட்களுக்கு முன் அதிநவீன மெமு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், குஷன் இருக்கைகள், எல்இடி விளக்குகள் உள்பட பல்வேறு அதிநவீன வசதிகள், பயோ-டாய்லெட்டுகளும் உள்ளன. மேலும், எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏசி பெட்டிகளில் விலை உயர்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், இந்த ரயில் இயக்கப்பட்ட முதல் நாளிலேயே திருவனந்தபுரம்-எர்ணாகுளம் இடையே ரயிலின் கழிப்பறையில் இருந்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப் திருடப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையில் புகார் தெரிவித்தனர். போலீசார் பைப்பை திருடிச்சென்ற மர்மநபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் ரயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். முதல்நாள் ஓட்டத்திலேயே ரயிலில் இருந்து குடிநீர் பைப்பை திருடிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்