தட்கல் மூலம் இந்திய ரயில்வேக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்...!

தட்கல் முறை மூலம் இந்திய ரயில்வேக்கு கடந்த 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை பயணிக்க வேண்டிய ரயிலுக்காக இன்று காலை குறிப்பிட்ட நேரத்தில் முன்பதிவு செய்தல் தட்கல் முறை முன்பதிவு ஆகும். ரயிலில், இரண்டாம் வகுப்புக்கு அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 10 சதவீதமும், பிற வகுப்புக்களுக்கு 30 சதவீத கட்டணமும் தட்கல் கட்டணமாக கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. 1997.ம் ஆண்டு குறிப்பிட்ட சில ரயில்களில் தொடங்கப்பட்ட தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை 2004-ல் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 2 ஆயிரத்து 677 ரயில்களில் கிடைக்கிறது. 11 லட்சத்து 57 ஆயிரம் இடங்களில் சுமார் 1 லட்சத்து 71 ஆயிரம் இடங்கள் தட்கலுக்கு ஒதுக்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தட்கல் மூலம் கிடைத்த வருவாய் என்ன என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட காலத்தில் தட்கல் மூலம் 21 ஆயிரத்து 530 கோடி ரூபாயும், பிரீமியம் தட்கல் மூலம் 3 ஆயிரத்து 862 கோடி ரூபாயும் இந்திய ரயில்வேக்கு வருவாயாகக் கிடைத்துள்ளது. இது 62 சதவீதம் அதிக வருவாயாகும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்