மெட்ரோ ரயிலில் சுவரொட்டி, நோட்டீஸ் ஒட்டினால் சிறை தண்டனை

மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்குட்பட்ட கட்டுமானங்களில் அனுமதியின்றி சுவரொட்டி, நோட்டீஸ் ஒட்டினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில் ரயில் பெட்டிகள், தடுப்புகள், மற்ற கட்டமைப்புகளில் அனுமதியின்றி நோட்டீஸ், சுவரொட்டி ஒட்டுவது மெட்ரோ ரயில்வே சட்டம் 2002-ன் பிரிவு 62 இன் கீழ் சட்டவிரோதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி செயல்படுவோருக்கு 6 மாத சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. எனவே இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி, மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் உடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்