டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை

வரும் செப்டம்பர் 5ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களில் யாரேனும் உரிய தகுதிகள் இல்லாமல் இருப்பது தெரியவந்தால், சம்மந்தப்பட்ட ஆசிரியரை பரிந்துரை செய்த முதன்மைக்கல்வி அலுவலர் ( CEO ) மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற தங்கள் மாவட்டம் சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான இயக்குநரின் அழைப்புக்கடிதம் மற்றும் விருது பெறும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மீது புகார் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எதுவும் நிலுவையில் இல்லை என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேலும் ஒருமுறை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதன்பின்னரே விருது பெறுவதற்கான அழைப்புக்கடித்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செப்டம்பர் 5ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் விருது வழங்கும் விழாவில், விருது பெறும் ஆசிரியர்கள் அழைப்புக்கடிதம் மற்றும் அறிவுரைகளின்படி அன்று காலை 9 மணிக்கு விழா அரங்கில் தவறாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்