தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி: அதிமுக, திமுக தலா ரூ.10 லட்சம், தேமுதிக ரூ.1 லட்சம் அளிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற் றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். குழந்தை சுஜித்தின் வீட்டுக்கு நேற்று மாலை வந்த முதல்வர் கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சுஜித்தின் படத் துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர், சுஜித்தின் பெற் றோரைச் சந்தித்து ஆறுதல் தெரி வித்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் முதல் வர் கூறியதாவது: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், அதிமுக சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும். ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை தவறி விழுந்தவுடன் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அரசுக்கு தகவல் கிடைத்தவுடன் அதன்பேரில் அமைச்சர்கள் உதயகுமார், விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோரும், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், தீயணைப்புத்துறை டிஜிபி காந்திராஜன் உள்ளிட்டோரும் இங்கேயே முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். இதில் ஓஎன்ஜிசி, என்ஐடி, என்எல்சி, எல் அண்ட் டி போன்ற நிறுவனங் களின் தொழில்நுட்பங்களும், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவன பேராசிரியர்களின் ஆலோ சனைகளும் பயன்படுத்தப்பட்டன. குழந் தையை உயிருடன் மீட்க விடாமுயற்சி செய்தோம். ஆனாலும் முயற்சி பலனளிக்க வில்லை. அரசு எல்லா வகைகளிலும் சிறப்பாக செயல்பட்டது. துணை முதல்வர் சம்பவ இடத் துக்கே வந்து ஆலோசனை வழங்கினார். ஆனால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டதால்தான், குழந்தையை உயி ருடன் மீட்க முடியவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி யுள்ளார். இது முற்றிலும் தவறானது. ஸ்டாலின் எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் பேசுகிறார். சுஜித்தை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடுபட்டோம். ஆனால், 2 வயதே ஆன குழந்தை என்பதாலும், உடல் மெலிந்த குழந்தையாக இருந்ததா லும் திட்டமிட்டபடி அவரை மீட்க முடிய வில்லை. பயன்படுத்தப்படாத ஆழ் துளைக் கிணறுகளை அரசு குறிப் பிட்டுள்ள தொழில்நுட்பத்தை பயன் படுத்தி மூட வேண்டும். அரசுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். திமுக, தேமுதிக நிதியுதவி சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பின்னர் சுஜித்தின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் திமுக சார்பில் அவர்களிடம் ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கினார். அதேபோல் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் தெரி வித்ததுடன் தேமுதிக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்