சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை!

சிறுவனிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 24வயது இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 1.62 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சண்டிகர் மாநிலம் சண்டிகர் சேர்ந்தவர் மீரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 7 வயதான தீபக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகன் உள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி, தன் கடையின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த மகனை திடீரென்று காணவில்லை என்றும், அவரை தேடி அலைந்தபோது ஓரிடத்தில் அழுதுகொண்டிருந்ததாகவும், விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் பழம் மற்றும் பூக்கள் வாங்கி தருவதாக ஏமாற்றி, சிறுவனை கடத்திச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்ததாக மீரா காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகார் அளிக்கப்பட்டதற்கு மறுநாளே முகேஷ் கைது செய்யப்பட்டதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனையில் சிறுவனின் மலதுவாரம் பகுதியில் துன்புறுத்தப்பட்டிருப்பது உறுதியானது. மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், சிறுவன் தீபக்கை முகேஷ் கடத்தி செல்வது பதிவாகியிருந்தது. முகேஷ் குற்றம் செய்ததை உறுதி செய்த காவல்துறையினர் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கு, சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையின் இறுதியில் முகேஷ் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த நீதிபதி பூனம் ஆர் ஜோஷி, இந்திய தண்டனைச்சட்டம் 377 (இயற்கைக்கு புறம்பான குற்றங்கள்), இந்திய தண்டனைச் சட்டம் 506 (மிரட்டுதல்) மற்றும் போக்ஸோ சட்டம் ஆகியவற்றின் கீழ் 10 ஆண்டுகள் சிறைதண்டனை அளித்ததோடு, 1.62 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்