இருசக்கர வாகனத்தில் மீது வந்த அழகுராஜ் மீது நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளனர்

சென்னையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ரவுடியை காட்டிக்கொடுத்த நபர் மீது எதிரி, நாட்டு வெடிகுண்டு வீச்சுசென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த தோட்டம் சேகர் இவருடைய மனைவி வழக்கறிஞர் மலர். இவர் திருவல்லிக்கேணி அதிமுக இணை செயலாளராக இருந்து வருகிறார். இவரும், இவரது மகன் அழகுராஜ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்னை ரிச்சி தெரு அருகே உள்ள டேம் சாலையில் வந்துகொண்டிருந்தபொழுது மர்ம கும்பல் ஒன்று சேகரின மனைவி மலர் மற்றும் அவரது மகன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு தோட்டம் சேகர் என்ற பிரபல ரவுடி ரஎதிரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவருடைய மகன் அழகுராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ராயப்பேட்டைபோலீசாரை தாக்கியதாக என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆனந்தனை போலீசில் காட்டிக் கொடுத்ததாக தோட்டம் சேகரின் மகன் அழகுராஜ் மீது இவருடைய எதிரி கும்பல் பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த இந்த நிலையில் தோட்டம் சேகரின் மனைவி மலர் மற்றும் மகன் அழகுராஜ் என இருவரும் திருவல்லிக்கேணி டேம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவருடைய எதிரி கும்பல் இருசக்கர வாகனத்தில் மீது வந்த அழகுராஜ் மீது நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளனர்.இதில் தப்பிப்பதற்காக அதிலிருந்து விலகிய போது சாலையின் நடுவே விழுந்து பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது இதில் தோட்டம் சேகரின் மனைவி மலர் மற்றும் அவருடைய மகன் அழகுராஜ் ஆகியோர் கடுமையாக காயமடைந்துள்ளனர். மேலும் எதிரி கும்பல் மலரின் மகன் அழகுராஜை அரிவாளால் வெட்டி உள்ளது.படுகாயமடைந்த அழகுராஜ் பாதுகாப்பு கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.மலர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்