மண்சரிவு ஏற்பட்டதில் உதகையில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு..

உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. புகழ்பெற்ற சுற்றுலா தளமான உதகை மற்றும் மஞ்சூர், குந்தா, முக்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. தொடர் மழையால் உதகை - மஞ்சூர் சாலை, மஞ்சூர் - கோவை சாலை உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து, பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து ஒன்றை ஜே.சி.பி இயந்திர உதவியுடன் அதிகாரிகள் மீட்டனர். தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்