நீட் ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பான அறிக்கையை அக்டோபர் 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவு!

தமிழக மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீதிபதி வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் ஆள்மாறாட்டத்தில் எத்தனை மாணவர்கள் ஈடுபட்டனர்? எவ்வளவு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என கேள்வி எழுப்பினர். ஆள்மாறாட்டத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், கல்லூரி ஊழியர்கள் யார் யார் என்றும் வினா எழுப்பினர். நீட் ஆள்மாறாட்டத்தில் அதிகாரிகள் துணையின்றி முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதால், மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை, மத்திய சுகாதார அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீட் ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பான அறிக்கையை அக்டோபர் 15ம் தேதிக்குள் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்