தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்.26-28 பள்ளிகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை விடப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. பள்ளிக் கால அட்டவணையின் படி முந்தைய நாளான சனிக்கிழமை பணி நாளாக இருந்த நிலையில், சனி மற்றும் திங்கள் கிழமை விடுமுறை விடப்படுகிறது. வெளியூரில் வசிப்பவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்கும் மீண்டும் ஊர் திரும்புவதற்கும் வசதியாக சனி மற்றும் திங்கள் கிழமை அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர்28 ஆம் தேதி விடுமுறை தினத்திற்கு பதிலாக வேறொரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தப் புதிய அறிவிப்பினால் பொதுமக்கள் மற்றும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்