மீனாட்சி கோவிலில் லட்டு ; வழங்குவதில் சிக்கல்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி முதல் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அக்.,27 தீபாவளி முதல் இலவசமாக லட்டு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதற்கு ராட்சத அடுப்பு மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லட்டுகள் தயார் செய்ய மடப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. ஆனால் கோவிலுக்கள் ராட்சத அடுப்பு பயன்படுத்த தீயணைப்பு துறையிடமிருந்து ' ஆட்சேபனை இல்லா சான்றிதழ் ' வழங்கப்பட வேண்டும். கோவிலில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. பாரம்பரிய மண்டபம் மற்றும் தூண்கள் எரிந்து கருகியது. எனவே பாதுகாப்பு கருதி தீயணைப்பு துறையின் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது. தீவிபத்தை மையமாக கருதி இனிவரும் காலங்களில் சேதம் ஏதும் ஏற்படகூடாது என்ற நோக்கில் தீயணைப்பு துறை அனுமதி வழங்குவதில் இழுபறி காட்டுகிறது. இந்நிலையில் தீபாவளி முதல் லட்டு வழங்குவதில் சிக்கல் நீடிப்பதால் லட்டு வழங்கப்படுமா அல்லது திட்டம் நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்