அமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தனது வீட்டில் அவரது தங்கை வள்ளியின் மகன் லோகேஷ் குமாரை (26) வளர்த்து வந்தார் இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தவர். இவர் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் சிவி சண்முகம் வீட்டில் உணவு அருந்தி விட்டு மேல் மாடியில் உறங்க சென்றுள்ளார். நேற்று முழுவதும் மேல்மாடி கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை தட்டி பார்த்துள்ளனர். கதவு திறக்கப்படாததால் தகவலறிந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். உள்ளே சென்று பார்த்தபோது லோகேஷ் குமார்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்தவுடன் மருத்துவமனையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனை செய்து அமைச்சர் சிவி சண்முகம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது இல்லத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அதிமுக பிரமுகர்கள் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் லோகேஷ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்