காங்கிரஸ் மீது மக்களுக்கு முழுநம்பிக்கை இந்திராகாந்தி நினைவுநாள் நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி, அக்.31புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் மறைந்த இந்திராகாந்தியின் நினைவு தினம் இன்று கட்சி அலு வலகத்தில் அனுஷ்டிக்கப் பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி இந்திராகாந்தி உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசிய தாவது: ஜனதா ஆட்சி அமைந்த போது இந்திராகாந்தி கட்சிக்குள்ளும், வெளியிலும் பலரும் எதிர்த்த னர். இந்திரா காந்தி மீது பொய் வழக்கு தொடர்ந்து சிறையிலும் தள்ளினர். அதையெல்லாம் முறியடித்து 1980 - ல் இந்திராகாந்தி மீண்டும் பிரதமரானார். தீவிரவாதத்தை ஒழிப்பதில் முனைப்புடன் அவர் பணியாற்றினார். அவரை நாம் தீவிரவாதத்திற்கே இரையாக்கி விட்டோம். இந்திராகாந்தியின் ஆட்சியில் இந்தியா வளர்ச்சிப்பாதையில் சென்றது. பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்திருந்தது. ஆனால் தற்போது மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் 4.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டை வழிநடத்தி செல்லும் திறமை பா.ஜ.க.வுக்கோ , மோடிக்கோ இல்லை. பொருளாதாரத்தை வழி நடத்தி செல்லும் திறமையும் அமைச்சரவைக்கு இல்லை. ரூ.500, ரூ.ஆயிரம் நோட்டை ஒழித்தனர். கள்ளப்பணத்தை பதுகக வசதியாக ரூ.2 ஆயிரம் நோட்டை கொண்டு வந்தனர். ஜி.எஸ்.டி. கொண்டு வந்ததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகளை மூடுகின்றனர். வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் லட்சக்கணக் கானவர்கள் வேலை இழந் துள்ள னர். பாராளுமன்ற தேர்தலில் வடமாநில மக்கள் மோடி யின் பேச்சுக்கு மயங்கி வாக்களித்தனர். தென்மாநில மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள் என்பதால் பா.ஜ.க.வுக்கு மரண அடி கொடுத்தனர். பாராளுமன்ற தேர்தலில் வைத்திலிங்கம் 70 ஆயிரம் வாக்கு வித்தியா சத்தில் தான் வெற்றி பெறுவார் என நினைத்தேன்வைத்திலிங்கமும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தார்ஆனால் புதுவை மக்கள் லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கத்தை வெற்றி பெறச்செய்தனர். இது வரலாற்று சாதனை. தட்டாஞ் சாவடி தொகுதியிலும்காமராஜ் நகர் தொகுதியிலும் என்.ஆர்.காங்கிரஸ் கதையை முடித்துள்ளோம். காமராஜ்நகர் தொகுதியில் 3 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜான்குமார் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் 7 ஆயிரம் வாக்கு வித்தி யாசத்தில் இமாலய வெற்றி பெற்றார். இது காங்கிரஸ் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. திட்டங்களை செயல் படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டு கவர்னர் தடுத்து வருகிறார். பிரசாரத்தில் வாகன ஊர்வலத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றேன் எனக்கூறி என்மீதும், காங்கிரஸ் தலைவர் மீதும் வழக்கு தொடர் கவர்னர் நிர்ப்பந்திக்கிறார்இதனால் தான் கவர்னர் ஹெல்மெட் அணியாமல் சென்றதை சுட்டிக்காட்டினேன்முகத்தை மறைத்து தேர்தல் பிரசாரம் செய்வது தேர்தல் விதிமுறைக்கு எதிரானதுபுதுவை மக்களின் எதிர்ப்பை கவர்னர் தொடர்ந்து சம்பாதித்து வருகிறார். எதிர்கட்சிகளுக்கு இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் கொள்கை. மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 தொகுதி உள்ளது. இதில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் 200 - க்கும் மேற்பட்ட தொகுதியை கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என கொக்கரித்தனர். ஆனால் 156 இடங்களைத்தான் பெற முடிந்தது. பா.ஜ.க100 இடத்தையே கைப் பற்றியுள்ளது. காஷ்மீர் தேர்தல் முடிந்து 2 வாரமாகி விட்டது. இன்னும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. - இவ்வாறு அவர் பேசினார்விழாவில் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் கந்தசாமிஎம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார்தீப்பாய்ந்தான், காங்கிரஸ் துணைத் தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ்தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் வீரமுத்து, வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுமான்செயலாளர் சாம்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்