தோசை மாவில் துாக்க மாத்திரையை கலந்து, கணவனை கழுத்தை நெரித்து கொலை

தோசை மாவில் துாக்க மாத்திரையை கலந்து, கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி, தம்பியுடன் கைதானார். புழல் அடுத்த, புத்தகரம், வெங்கடசாய் நகர் விரிவாக்கம், 13வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 26; அதே பகுதியில் உள்ள, கோழிஇறைச்சி கடையில், வேலை செய்தார். இவரது மனைவி அனுபிரியா, 26. ஐந்து ஆண்டுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, நான்கு வயது மகன் உள்ளார்.மது பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதால், கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த, 13ம் தேதி இரவும், அவர்களுக்குள் தகராறு நடந்தது. மறுநாள் காலை, சுரேஷ் திடீரென, வீட்டில் இறந்து கிடந்தார். புழல் போலீசார், சாதாரண மரணமாக வழக்கு பதிந்து விசாரித்தனர். பிரேத பரிசோதனையில், அவர் மூச்சுத்திணறி இறந்தது தெரிந்ததை அடுத்து, அனுபிரியா, மற்றும் விழுப்புரம் மாவட்டம், முகையூர் கிராமத்தைச் சேர்ந்த, அவரது தம்பி முரசொலி மாறன், 19, ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். சுரேஷ் தினசரி குடித்துவிட்டு தகராறு செய்ததால், அவரை கொலை செய்ய, அனுபிரியா திட்டமிட்டதும், இதற்காக, தன் சித்தி மகனான முரசொலி மாறனை, அனுபிரியா கூட்டு சேர்த்ததும் தெரியவந்தது.சம்பவத்தன்று, அனுபிரியா, அதிகளவில் துாக்க மாத்திரை கலந்த தோசை மாவில், தோசை சுட்டு, சுரேஷுக்கு கொடுத்துள்ளார். அவர் உறங்கிய பின், முரசொலி மாறனுடன் சேர்ந்து, தலையணையால் முகத்தில்அழுத்தியும், துப்பட்டாவால் கழுத்தைநெரித்தும், கொலை செய்துள்ளனர்.இதையடுத்து, அனுபிரியா, முரசொலி மாறன் ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்