அரசு மருத்துவமனையில் அவலம்...!

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மினசாரம் துண்டிக்கப்பட்டதால் நோயாளிகளும், குழந்தைகளும் கடுமையான சிரமத்திற்கு ஆளாயினர். எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள, பிளாக் ஏ பகுதியில் இரவு 8 மணியளவில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், போதிய ஊழியர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர்களை கூட இயக்க ஆள் இல்லாததால், உள் நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தபோதும், அவர்கள் வருவதற்கு காலதாமதம் ஆனதாக, நோயாளிகள் குற்றம்சாட்டினர். மின்சாரம் இல்லாததை பயன்படுத்தி குழந்தைகள் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். பிளாக் ஏ பிரிவில், அவசர சிகிச்சைப் பிரிவும் செயல்படுவதால், அலட்சியமாக செயல்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்