புறநகர், விரைவு ரயில்களை பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல்.
சீன அதிபர் ஜின்பிங் இன்று சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் இன்று சென்னை வரும்போது, மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்தச் சந்திப்பு வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசு பல பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேற்கண்ட இரண்டு நாட்களில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாமல்லபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் இன்று சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புறநகர், விரைவு ரயில்கள் பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பிறகு அனுப்பப்படும் எனவும் தமிழக அரசு கூறும் நேரத்தில் சிறிது நேரம் ரயில்கள் நிறுத்தப்படும் எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.