ஜம்மு-காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் சொந்த விஷயம் என்றும், பிற நாடுகள் அதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம்

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் சொந்த விஷயம் என்றும், பிற நாடுகள் அதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை இந்தியா வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை பீஜிங் சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜி ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பிற நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்றும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு சீனாவுக்கு நன்றாகவே தெரியும் எனவும் கூறியுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து பிற நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் ரவீஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்