ஒன்றிய அதிகாரி மற்றும் சுகாதார பணியாளர்களிடம், பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்

திருத்தணி:துாய்மை பணிகள் செய்த ஒன்றிய அதிகாரி மற்றும் சுகாதார பணியாளர்களிடம், பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். திருத்தணி ஒன்றியம், மத்துார் கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில், சிறுமி நந்தினி, 5, மர்ம காய்ச்சலால் இறந்தார்.இதையடுத்து, நேற்று காலை, திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ் உட்பட சுகாதார பணியாளர்கள், 30க்கும் மேற்பட்டோர், மத்துார் கிராமத்திற்கு சென்று, சுகாதார பணிகளை மேற்கொண்டனர். மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், குளோரின் கலந்து குடிநீர் வினியோகம் செய்தனர்.அப்போது, பொதுமக்கள், 100க்கும் மேற்பட்டோர், ஒன்றிய அதிகாரி மற்றும் சுகாதார பணியாளர்களை முற்றுகையிட்டனர்.பல மாதங்களாக துாய்மை பணிகள் மேற்கொள்ளாமல், ஒரு குழந்தை பலியான பின் தான் இங்கு துாய்மை பணிகள் செய்கிறீர்கள். இரு மாதங்கள் முன்வரை, குடிநீர் வினியோகம் செய்யாததால் தெருக்களில் பள்ளம் தோண்டி குடிநீர் பிடித்து வந்தோம்.அப்போது, எந்த அதிகாரியும் வரவில்லை என, சரமாரியாக அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்களை பொதுமக்கள் கேள்வி கேட்டனர்.இதற்கு, அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறினர். ஒன்றிய அதிகாரி பாபு பொதுமக்களை சமாதானப்படுத்திய பின், பணிகள் மற்றும் மருத்துவ முகாம் தொடர்ந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்