மெட்ரோ ரயிலில் 2.23 கோடி பேர் பயணம் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 2.23 கோடி பயணிகள் சென்னை மெட்ேரா ரயிலில் பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் மட்டும் 32 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை, மெட்ரோ ரயில்நிறுவனம் தொடங்கியது முதல் சென்னை மக்களுக்கு பல்வேறு வசதிகளுடன் பாதுகாப்பான மற்றும் நிலையான போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயிலில் மொத்தம் 31,89,591 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகள் குறுகிய நேரத்தில் தங்களது சேருமிடத்தை சென்று சேர்ந்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த செப்டம்பர் மாதத்தில் 21 நாட்கள் தலா 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். அதன்படி செப்டம்பர் 13ம் தேதி 1,19,888 பயணிகளும், 6ம் தேதி 1,16,575 பயணிகளும், 12ம் தேதி 1,16,347 பயணிகளும், 16ம் தேதி 1,15,329 பயணிகளும், 2ம் தேதி 1,14,240 பயணிகளும், 30ம் தேதி 1,14,123 பயணிகளும், 7ம் தேதி சனிக்கிழமையன்று 1,01,430 பேரும் பயணம் செய்துள்ளனர். இதையடுத்து இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 2.23 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு இணைப்பு சேவைகள் வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ, ஷேர்டாக்ஸி மற்றும் மெட்ரோ பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சிறிய பேருந்து சேவைகளும், ஓ.எம்.ஆரில் உள்ள ஐடி வழித்தடங்களில் டெம்போ வாகனங்களும் இயக்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்