கவர்னர் ஆலோசகர்கள் விஜயகுமார், ஸ்கந்தன் திடீர் ராஜினாமா?

கடந்த ஜூன் மாதம் 15 -ம் தேதியன்று, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கவர்னராக சத்ய பால் மாலிக் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆலோசகர்களாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஸ்கந்தன், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மூவர் என ஐந்து பேர் பதவி ஏற்றனர். கவர்னர் மாலிக் முதல்வர் போலவும், ஐந்து ஆலோசகர்கள் அரசுத் துறைகளின் அமைச்சர்கள் போலவும் செயல்பட்டுவந்தனர். மொத்தமுள்ள அரசுத்துறைகளை ஐவரும் பிரித்துக்கொண்டு நிர்வாகப் பணியைக் கவனித்துவந்தனஇவர்களின் பதவிக் காலம், வருகிற அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிவுக்குவருகிறது. கவர்னர் ஆட்சி முடிந்து நவம்பர் 1-ம் தேதி துணைநிலை கவர்னர் இருவர் புதிதாகப் பதவியேற்க உள்ளனர். அதையொட்டி, அக்டோபர் 26-ம் தேதியன்று, மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. தற்போதைய ஜம்மு -காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக், கோவா மாநில கவர்னராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நவம்பர் 1-ம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை கவர்னராக கிரீஷ் சந்திர முர்மு, லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை கவர்னராக ஆர்.கே. மாத்தூர் ஆகிய இருவரை அறிவித்துள்ளது. இந்த இருவரும், அடுத்த சில நாள்களில் புதிய பதவிப்பிரமாணம் செய்துகொள்ளத் தயாராகி வருகிறார்கள். காஷ்மீர் தீவிரவாதிகள் தொடர்பான விவகாரங்களை விஜயகுமார் கவனித்துக்கொண்டார். அதுதொடர்பாக, மத்திய அரசின் உள்துறைக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில ராணுவம், துணை ராணுவப்படை, மாநில போலீஸ் ஆகியவற்றுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டார். குண்டு துளைக்காத கார், ஜாமர் பொருத்தப்பட்ட வாகனங்களில் முக்கியமான ஊர்களுக்கு விசிட் போய், அங்குள்ள உயர் அதிகாரிகளுக்கு அட்வைஸ் வழங்கி வந்தார். ஏற்கெனவே, மூன்று வருடங்கள் (1998 - 2001) எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐஜி-யாக காஷ்மீரில் பணியாற்றியவர். சிஆர்பிஎஃப் தலைவராகப் பணியில் இருந்தவர். எஸ்.பி.ஜி என்று அழைக்கப்படும் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட விவிஐபி-கள் செக்யூரிட்டி பிரிவில் பணியாற்றியவர். மத்திய உள்துறையின் சீனியர் செக்யூரிட்டி அட்வைஸராகவும் பணிபுரிந்தவர். தமிழக அரசுப் பணியிலிருந்து மத்திய அரசுப் பணிக்குச் சென்றார். அப்போது இணைச் செயலாளர் அந்தஸ்தில் காஷ்மீர் நிர்வாகத்தை டெல்லியில் இருந்தபடி பல ஆண்டுகள் கவனித்து வந்தவர். அந்த வகையில்தான், இவரை அட்வைஸர் பதவிக்குத் தகுதியானவர் என்று சீர்தூக்கிப்பார்த்து நியமித்தனர். பதவி ஏற்ற பிறகு, ஸ்ரீநகரிலும் ஜம்முவிலும் சமீபத்தில் மின்சாரத்தில் ஓடும் 40 அரசு பஸ்களைத் தொடங்கிவைத்தார். மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று, சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவை நீக்கும் ஆவணத்தில், மாநில சட்டத்துறையைத் தற்போது நிர்வகிப்பவர் என்கிற வகையில் இவர்தான் கையெழுத்திட்டார். 100-க்கும் மேலான சட்டத் திருத்தங்களைச் செய்திருக்கிறார். இந்த இருவர் தவிர மற்ற மூவரும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவரவர் துறைகளில் எந்தெந்த திட்டங்களை அமல்படுத்தலாம் என்கிற ரிப்போர்ட்டை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இப்படி சுறுசுறுப்பாகச் செயல்பட்ட ஐவரில், இருவரைத் துணை நிலை கவர்னராகப் பிரதமர் மோடி நியமிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. ஆனால் ஐவரையும் தூக்கியடித்து, வெளி மாநிலங்களைச் சேர்ந்த இருவரை நியமித்துவிட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்