வயதான தம்பதியை தாக்கி திருட முயன்று, அவர்களால் விரட்டியடிக்கப்பட்ட கொள்ளையர்கள் ரெயில் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணபுரத்தை சேர்ந்த வயதான தம்பதி சண்முகவேல்-செந்தாமரை. ஊருக்கு வெளியே உள்ள தோட்டத்தில் அவர்கள் தனியாக வசித்து வந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி அங்கு வந்த முகமூடி அணிந்த இரு நபர்கள் அரிவாளால் தாக்கி கொள்ளையடிக்க முயன்றனர்.வயதான தம்பதியினர் கையில் கிடைத்த பொருட்களை ஆயுதமாக பயன்படுத்தி எதிர் தாக்குதல் நடத்தியதில் இருவரும் தப்பி ஓடினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தம்பதிக்கு பாராட்டு குவிந்ததுடன், ஆகஸ்ட் 15 ந்தேதி நடந்த சுதந்திர தின விழாவில் அந்த தம்பதிக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீர தீர செயலுக்கான விருது வழங்கி கவுரவித்தார். தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து 50 நாட்களாக தேடிவந்த நிலையில், கொள்ளையர்கள் இருவரும் நேற்று கீழ கடையம் ரெயில்நிலையத்தின் முன்பு கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவன் கீழ கடையத்தை சேர்ந்த பாலமுருகன் என்றும் மற்றொருவன் தூத்துக்குடி சவலப்பேரியை சேர்ந்த பெருமாள் என்றும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து செந்தாமரையின் 35 கிராம் தாலிசெயின், மற்றும் இரு அரிவாள்கள், ஒரு ஏர் கன் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், பாலமுருகன் 38 வழக்குகளில் தொடர்புடையவன் என்றும், பெருமாள் மீது 8 வழக்குகள் உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே கைதான கொள்ளையர்கள் இருவரும் ரெயில் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்