மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடப்பதால், கோயம்பேடு பேருந்து போக்குவரத்து நெரிசல்

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடப்பதால், ஜவஹர்லால் நேரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, பீக் ஹவர்ஸ் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகம் காணப்படுகிறது. இதனால் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பேருந்து நிலையத்துக்குள் செல்ல நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக 20 முதல் 30 நிமிட நேரம் தாமதமாகிறது. இதனால் கோயம்பேடு செல்லும் பயணிகளும், கோயம்பேடு சென்று பிற இடங்களுக்கான பேருந்தை பிடிக்க செல்லும் பயணிகளும் கடும் துயரத்தை சந்தித்து வந்தனர். சில பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்தை தவறவிட்ட சம்பவமும் நடைபெற்றது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகத்துக்கு பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்தபடி இருந்தன. இதேபோல், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தரப்பில் இருந்தும் டிரிப் நேரம் வீணாவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீஸாருடன் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பேருந்துகள் நுழைவு பகுதியை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் மாற்றியுள்ளனர். இதற்காக பேருந்து நிலைய காம்பவுன்ட் சுவரின் ஒரு பகுதியை அவர்கள் இடித்துள்ளனர். இதனால் அரசு பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் எளிதாக வந்து செல்வதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்