தமிழக அமைச்சர்களின் வெளிநாடு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சனம்...!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தமிழக அமைச்சர்கள், விஜய் மல்லையா போன்று ஒளிந்து கொள்வதற்காகவே, வெளிநாடு பயணம் மேற்கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழகத்தில் அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை ஊழல் நிறைந்திருப்பதாக கூறினார். திமுகவை விட 5 எம்.எல்.ஏக்களே அதிமுகவில் அதிகம் இருப்பதாக தெரிவித்த அவர், எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும் என குறிப்பிட்டார். எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என அனைவருக்கும் பணம் கொடுத்தே ஆட்சி நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய ஸ்டாலின், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே அமைச்சர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்வதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, களக்காடு பகுதியில் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் களக்காடு பகுதியில் தீயணைப்பு நிலையம், கலைக்கல்லூரி அமைக்கப்படும் என தெரிவித்தார். அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோவுக்கு வழிவிடுமாறு ஸ்டாலின் மைக்கில் தெரிவிக்க, உடனே தொண்டர்கள் அனைவரும் விலகி ஆட்டோவுக்கு வழிவிட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்