5 மாவட்டங்களுக்கும் புதிய ஆட்சியர்கள், எஸ்பிக்கள் நியமனம்...!

புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கும் புதிய ஆட்சியர்கள், எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்களை தமிழக அரசு ஆட்சியராக நியமித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஜான் லூயிசும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக சிவன் அருளும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினியையும், தென்காசி மாவட்ட ஆட்சியராக அருண் சுந்தர் தயாளனையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதே போல், புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கும், எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட, தென்காசி மாவட்டத்தின் முதல் எஸ்பியாக சுகுணா சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஜெயச்சந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக கண்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மயில்வாகனனும், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக விஜயகுமாரையும் நியமித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுபோல், தில்லை நடராஜன், பாஸ்கரன், இளங்கோ, மகாபாரதி, வேதரத்தினம் ஆகிய காவல்துறை அதிகாரிகளுக்கு, காவல்துறை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்