திரை நட்சத்திரங்கள் ராதா ரவி, நமீதா பாஜகவில் ஐக்கியம்...

தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக வளரும் என்பதை தொண்டர்களின் பிரம்மாண்ட வரவேற்பின் மூலம் உணர்வதாக, அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். திருவள்ளூரில் நடைபெற்ற விழாவில், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் கட்டும் பணியை, ஜே.பி.நட்டா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் சக்தி மிக்க கட்சியாக பாஜகவை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை, தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் மூலமாக வந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தமிழக கலாசாரம் மிகவும் தொன்மையானது என்றும் அது இல்லாமல் இந்திய கலாச்சாரம் முழுமை பெறாது என்றும் நட்டா தெரிவித்தார். தமிழகம் வந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சாரட் வண்டியில் அழைத்து வந்து பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில், பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பாஜகபில் இணைந்துள்ளார். நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் நடிகர் ராதாரவி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், இன்று சென்னை வந்த பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை விமான நிலையத்தில் சந்தித்த நடிகர் ராதாரவி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதுபோல், நடிகை நமீதாவும் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், அவர் அக்கட்சியில் இணைந்தார். நமீதா பாஜகவில் இணைந்திருப்பது, அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்