யூடியூப் சேனல்கள் PRESS,MEDIA அடையாள அட்டையை பயன்படுத்த தடை என்ற தகவல் உண்மையல்ல!

யூடியூப் சேனல்களில் பணிபுரிபவர்கள் இனி Press என்ற வார்த்தையையோ, அடையாள அட்டையோ பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை தரப்பு தெரிவித்துள்ளது . யூடியூபில் செய்தி வெளியிடும் சேனல்களில் பணிபுரிபவர்களை செய்தியாளர்களாக அங்கீகரிக்கவோ, அவர்களை Press அல்லது Media என்று அறிமுகப்படுத்திக் கொள்வதையோ ஏற்க முடியாது என மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல் பரவியது. மேலும், மக்கள் தொடர்பு அமைச்சகமான RNIல் பதிவு செய்துள்ள பத்திரிகை, ஊடகம் மற்றும் ரேடியோ நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே செய்தியாளர்கள், ஊடகம் (Media) என்ற வார்த்தையையும், அடையாள அட்டையையும் பயன்படுத்த முடியும் எனவும், மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை தரப்பு, பிரஸ் மீடியா என்ற வரையறைக்குள் யூடியூப் சேனல்கள் சேர்க்கப்படாது என, மத்திய அரசு அறிவித்துள்ளதாக வெளியான தகவலில் உண்மைத்தன்மை இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்