ஈரான் நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது

ஈரான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அசெர்பைஜான் மாகாணத்தில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 300 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 2003ம் ஆண்டு ஈரான் நாட்டின் பாம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்