பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
இந்தியாவின் ஆணிவேராக கிராமங்களும், கிராம பஞ்சாயத்துகளும் கருதப்படுகிறது. கிராமங்களுக்கு அரசியல் அதிகாரமளித்தல் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக கருதப்படுகிறது . தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக உள்ளாட்சித்தேர்தல் நடந்து முடிந்து வெற்றி, தோல்வி முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்திய பிரதமர் ஆனது போல சிலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் புகைப்படத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆரவாரம் செய்வதை காணமுடிகின்றது. ஏன் அவர்களுக்கு இந்த வெற்றி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை பொதுமக்களும், வாக்காளார்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரண கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வருவதால் சம்பந்தப்பட்ட நபருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எனது இந்த பதிவில் காணலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வரும் நபருக்கு மாதச்சம்பளம் போல சம்பளம் எதுவுமே கிடையாது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.. ஆனால் இது தான் உண்மை . சம்பளமே இல்லாத ஒரு பதவிக்கு ஏன் அவர்கள் இந்த போ...