நள்ளிரவில் அமித்ஷா ஏற்படுத்திய 'டுவிஸ்ட்' : நடந்தது என்ன

மஹாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக நேற்று காலை முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்.,ன் அஜித் பவாரும் பதவியேற்றுக் கொண்டனர். இதனையடுத்து அமித்ஷாவை அரசியல் சாணக்கியர் என பலரும் புகழ்ந்து வருகின்றனர். மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் ஏறக்குறைய உறுதி செய்து வைத்திருந்தன சிவசேனா-காங்-தேசியவாத காங்., கட்சிகள். நேற்று (நவ.,23) இந்த 3 கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவ.,22 ம் தேதி இரவு 9 மணி முதல் நவ.,23 காலை 8 மணிக்குள் அனைத்தும் தலைகீழாக மாறி விட்டன. நடந்தது என்ன : 3 கட்சிகள் இடையே கூட்டணி முடிவாகி விட்டாலும், சபாநாயகர் பதவி யாருக்கு என்பதிலேயே இழுபறி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அமித்ஷாவிற்கு மிகவும் நெருக்கமான பூபேந்திர யாதவ், யாருக்கும் தெரியாமல் மும்பை சென்றதாக கூறப்படுகிறது. மீடியாக்களின் ஒட்டுமொத்த கவனமும் 3 கட்சிகளின் பக்கமே இருந்ததால் பா.ஜ.,வின் இந்த ரகசிய நகர்வு அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்படவில்லை. அமித்ஷாவின் டுவிஸ்ட் : 3 கட்சிகளும் கூட்டணி குறித்து ஆலோசித்து விட்டு சென்ற ஒரு மணி நேரத்திற்கு பிறகு, நள்ளிரவில், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவாரை அமித்ஷா போனில் அழைத்துள்ளார். அமித்ஷா பேசிய சில நிமிடங்களிலேயே அஜித்பவார்-பட்நாவிஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நவ.,23 அன்று காலை 2.10 மணிக்கு பட்நாவிஸ் மற்றும் அஜித் பவாரை பதவியேற்க தயாராகும்படியும், மஹாராஷ்டிர கவர்னரின் செயலாளரிடம் ஜனாதிபதி ஆட்சியை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை பிறப்பிக்கும்படி அமித்ஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 6.30 மணிக்கு பதவியேற்கவே முதலில் பா.ஜ., திட்டமிட்டுள்ளது. ஆனால் காலையிலேயே பதவியேற்பிற்கான ஏற்பாடுகளை துவங்க வேண்டும் என முடிவு மாற்றப்பட்டதால் ஒரு மணி நேரம் தாமதாக 7.30 மணிக்கு பதவியேற்பு நடந்ததாக கூறப்படுகிறது. 3 கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்த ஒரு மணி நேரத்திலேயே, பதவியேற்பிற்கான பணிகளை பா.ஜ., துவங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்