நள்ளிரவில் வீடுகளை நோட்டமிடும் அரை நிர்வாண மனிதர்...!

சென்னை, போரூர் அருகே இரவில், அரை நிர்வாணசென்னை, போரூர் அருகே இரவில், அரை நிர்வாணத்தில் சுற்றித் திரியும் மர்ம நபர், கையில் ஆயுதங்களுடன் வீடுகளை நோட்டமிட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போரூர் - சமயபுரம் 5வது தெருவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள், திசை மாற்றி வைக்கப்பட்டிருப்பதை கண்டு, அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், உள்ளாடைகள் மட்டுமே அணிந்து முகத்தை மறைத்த நபர் ஒருவர், கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், சுவர் ஏறி குதித்து, வீடுகளை நோட்டம் விட்டு வந்துள்ளார். கண்காணிப்புக் கேமராக்களில் முகம் பதிவாகாமல் இருக்க, நீளமான கட்டையால், அவற்றை திசை திருப்பி வைப்பதும் அதில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து, வளசரவாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன், அரை நிர்வாணக் கோலத்தில், வீடுகளை நோட்டம் விடும் மர்ம நபரை பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.த்தில் சுற்றித் திரியும் மர்ம நபர், கையில் ஆயுதங்களுடன் வீடுகளை நோட்டமிட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போரூர் - சமயபுரம் 5வது தெருவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள், திசை மாற்றி வைக்கப்பட்டிருப்பதை கண்டு, அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், உள்ளாடைகள் மட்டுமே அணிந்து முகத்தை மறைத்த நபர் ஒருவர், கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், சுவர் ஏறி குதித்து, வீடுகளை நோட்டம் விட்டு வந்துள்ளார். கண்காணிப்புக் கேமராக்களில் முகம் பதிவாகாமல் இருக்க, நீளமான கட்டையால், அவற்றை திசை திருப்பி வைப்பதும் அதில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து, வளசரவாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன், அரை நிர்வாணக் கோலத்தில், வீடுகளை நோட்டம் விடும் மர்ம நபரை பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்