ரூ.5,027 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள்.. 20,351பேருக்கு வேலைவாய்ப்பு.. எடப்பாடியார் அசத்தல்.

சென்னை: தமிழகத்தில் தொழில் துவங்க, 9 தொழில் நிறுவனங்களுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. மொத்த திட்ட மதிப்பு ரூ.5,027 கோடி. 20,351பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு இதனால் உருவாகும். சமீபத்தில், வெளிநாட்டு பயணத்தின்போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படி, கையெழுத்திட்ட 3 அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தொழில் நிறுவனங்களுக்கான குறை தீர்க்க உதவும் தொழில் நண்பன் (biz buddy) என்ற இணைய தளமும் துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு தொழில் வழி்காட்டி நிறுவனத்தின் புதிய பெயர் மற்றும் லோகாவை முதல்வர் வெளியிட்டார். நாகை மற்றும் பெரும்பாக்கத்தில் புதிய ஐடிஐ தொடங்க ஒப்பந்தம், பேப்பர் போர்டு உற்பத்தியில் ரூ.515 கோடியில், 250 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஐடிசி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் ரூ.604 கோடியில் 11 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பிஒய்டி இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் ரூ.23.43 கோடி மதிப்பில் 2 புதிய தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் எரிசக்தி துறையில் ரூ.635.4 கோடி மதிப்பில் 4,321 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஏதர் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் எரிசக்தி உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் ரூ.250 கோடி மதிப்பில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஸ்ரீவாரி எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் ரூ.503.6 கோடி மதிப்பில் 330 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மிட்சுபா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கட்டுமான கருவிகள் உற்பத்தி துறையில் ரூ.98 கோடி மதிப்பில் 550 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் எஸ்என்எஃப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஃபுட்வேர் துறையில் ரூ.175 கோடி முதலீட்டில் 3ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் க்ரோத் லிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் டி.ஆர்.டி.ஓ., சென்னை ஐஐடி நிறுவனங்களுடன் பாதுகாப்பு தொழில் பெருவழித்திட்டத்திற்காக ஒப்பந்தம் இந்த ஒப்பந்தங்கள் இன்றைய நிகழ்வில் போடப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போது செய்யப்பட்டுள்ள, ஒப்பந்தங்கள் மூலம் 20, 351 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் தொழில் துவங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே, அதிக தொழிற்சாலை உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. ரூ. 3 கோடியில் திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு பேணி பாதுகாக்கப்பட்டு வருவதால், தொழில் துறை மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி சம்பத், நிலோபர் கபில் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்