போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைப்பு

புதுச்சேரி யூனியன் காரைக்காலில் வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல்துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். காரைக்கால் புறவழிச்சாலை தீன்ஸ் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, கலால் மற்றும் காவல்துறையினர், அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த அறையில் போலி மதுபானம் தயாரிக்கும் இயந்திரங்கள், ஹோலோகிராம்கள், ஸ்டிக்கர்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்